பொறியிளாளருமான மன்சூர் அவர்களினால் முதலியார்வட்டை நீர் பாசன புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

எஸ்.எம்.சன்சிர்  
 சிலோன் முஸ்லிம் கிழக்கு பிராந்திய காரியாலயம்

இறக்காமம் பிரதேசத்திற்கு உட்பட்ட முதலியார்வட்டை விவசாயிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த நீர் பாசன அணைக்கட்டு பிரச்சினை  தெடர்பாக பல அரசியல் வாதிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்விதமான தீர்வும் கிடைக்காதபட்சத்தில். அவ்விவசாய சங்கம் இறக்காமம் பிரதேச ஓருங்கினைப்பு குழு இணைத்தலைவரும் தேசிய காங்கிரசின்  கிழக்குமாகாண அமைப்பாளரும் பொறியிளாளருமான அல் ஹாஜ்
எஸ்.ஜ.மன்சூர் அவர்களிடம் வேண்டிக் கெண்டதற்கிணங்க.

  கடந்த காலங்களில் இறக்காமம் பிரதேச ஓருங்ககினைப்பு குழு கூட்டங்களில் முன்வைக்கப்பட்டு நீர் பாசன அமைச்சினால் 8 மில்லியன் நிதி ஒதுக்கிடுசெய்யப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது இவ் வேலை திட்டங்களை இறக்காமம் பிரதேச ஓருங்கினைப்பு குழு இணைத்தலைவரும் அல் ஹாஜ் எஸ்.ஜ.மன்சூர் மற்றும் அம்பாரை மாவட்ட நீர் பாசன திணைக்கள உதவி பொறியிலாளர் திரு பண்டார, தேசிய காங்கிரசின் ஹைய் கொமான்ட் உறுப்பினரும் தெழில்நுற்ப உத்தியோகத்தருமான   எம்.எஸ்.எம்.பரீட்  அவர்களும் நேற்று மாலை  2018.08.24ம் திகதி பார்வையிட சென்றிருந்தனர். மேலும் இவ் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தமைக்கு முதலியார்வட்டை விவசாய சங்கம் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கெண்டனர்.