வறட்சியால் நன்னீர் மீன்பிடி கைத்தொழிலுக்கு பாரிய பாதிப்பு


நாட்டின் பல மாகாணங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நன்னீர் மீன்பிடி கைத்தொழிலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நீர்நிலைகள் பூரணமாக வற்றியுள்ளதால் மீன்வளம் பாதிப்படைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்காரணமாக நன்னீர் மீன்பிடி கைத்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்குவதன் மூலம் அவர்களுக்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மீனவர்களின் பிரச்சினை சம்பந்தமாக மீன்பிடி மற்றும் நீர்வழங்கல் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் மேற்குறித்த கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...