சமூர்த்தி பயனாளிகள் தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்



(க.கிஷாந்தன்)

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் சமூர்த்தி உதவு தொகைகளை சமூர்த்தி பயனாளிகளுக்கு முறையாக வழங்காமலும், உதவு தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து அதற்கு எதிர்த்து 11.08.2017 அன்று லிந்துலை தலவாக்கலை நகரசபைக்கு அருகாமையில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ஓரத்தின் சமூர்த்தி உதவு தொகை பெறும் சுமார் 200ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தங்களின் பாதிப்பு தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்ட கொடுப்பனவை நல்லாட்சி அரசாங்கம் நிறுத்தியது ஏன் ? என்ற கேள்வியையும் எழுப்பினர்.

தற்பொழுது சமூர்த்தி உதவு தொகை பெறும் சில பயனாளிகளுக்கு இந்த உதவு தொகையை உரிய வேளையில் வழங்காமலும், நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் சமூர்த்தி பயனாளிகள் தெரிவித்தனர்.

அத்தோடு நிறுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட குறித்த தொகையை உடனடியாக வழங்கப்படாத பட்சத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவும் எதிர்ப்பினை வெளிப்படுத்தவும் தயாராக உள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இந்த சமூர்த்தி உதவு தொகையை எமக்கு நல்லாட்சி அரசாங்கம் வழங்க வேண்டும் என  வழியுறுத்தியே சமூர்த்தி உதவு தொகை பயனாளிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அதன்பின் நுவரெலியா பிரதேச அதிகாரி ஒருவரிடம் சமூர்த்தி பயனாளிகளின் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. பின் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டமை குறிப்பிடதக்கது. 





Powered by Blogger.