ஜனாதிபதிக்கும்,பிரதமருக்கும் கடிதம் அனுப்பியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு


தேர்தல் ஆணைக்குழு சபை மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்கள் நாளுக்கு நாள் பிற்போடப்படுவது குறித்தே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட மூவரின் கையொப்பங்களுடன் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பின் 20வது திருத்தம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் பார்வை என்ன என்பது குறித்தும் இந்த கடிதத்தில் தெளிவுப் படுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.