Header Ads

ad728
  • Breaking News

    பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கிவைப்பு



    ஏகே.அஸ்வர் 
    (இறக்காமம் செய்தியாளர்) 

    இறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட நான்கு சமுகசேவைகள் சங்கங்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கிவைக்கின்ற நிகழ்வு 2017.08.25 நேற்று இறக்காமம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளா எம்.எம்.நசீர் தலைமையில் நடைபெற்றது.

     இன்நிகழ்வில் பிரதம அதிதியாக  ஸ்ரீ லாங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும் ஏனய அதிதிகளாக இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களான யு.கே.ஜபிர்(மௌலவி) எம்.ஐ.நைசார் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் அரச அதிகாரிகளும்  கலந்து கொண்டனர்.

    இவ்உபகரணங்கள் பாராழுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டின் மூலம் 120 வறிய குடும்மங்களுக்கு வாழவாதார உபகரணங்களும் இறக்காமம் அல்-ஹ_தா பள்ளிவாசலுக்கு ரூபா 200000.00 புனரைமப்புப் பணிக்கும் அக்பர் பள்ளிவாசலுக்கு கதிரை கொள்வனவு செய்வதற்கு ரூபா 120000.00 வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.




    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728