Aug 15, 2017

ரவி கரு­ணா­நா­யக்க இரா­ஜி­னாமா விவ­காரம் : விசா­ரணையின் பின்னரே இறுதித் தீர்­மானம்

நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர் இரு அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா செய்­துள்­ளனர். எம்மால் முடி­யு­மான அள­விற்கு நல்­லாட்­சியை நாம் அமுல்­ப­டுத்தி வரு­கின்றோம். இதுவே நல்­லாட்­சிக்­கான ஆரம்­ப­மாகும். இனி தொடர்ந்து பய­ணிக்கும். 
மேலும் ரவி கரு­ணா­நா­யக்­கவின் இரா­ஜி­னாமா தொடர்பில் விசா­ர­ணைகள் முடிந்து பூர்த்­தி­யான முடிவு வந்த பின்னர் பரி­சீ­லனை செய்து இறுதி தீர்­மா­னத்தை அர­சாங்கம் எடுக்கும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.
நல்­லாட்­சி­யையும் சிறப்­பான யுகத்­தையும் ஐந்து வரு­டத்தில் ஏற்­ப­டுத்த இய­லாது. ஐந்து வருட காலப்­ப­கு­திக்குள் ஆரம்ப அடித்­த­ளத்தை இட­மு­டியும். முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வேண்­டு­மாயின் பத்து வரு­டங்கள் தேவை­யாகும். ஆகையால் ஐந்து வருடம் முடிந்த பின்னர் எமது ஆட்சி நீடிக்க வேண்­டுமா என்­ப­தனை மக்கள் தீர்­மா­னிப்பர் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் சுஜித் அக்­க­ர­வத்­தையின் நூல் வெளி­யீட்டு விழாவில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 
அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,
நவீன தொழில்­நுட்­பத்தின் வரு­கையின் ஊடாக உலகில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. தொலை­பேசி, இணை­ய­த்தளம் ஆகி­ய­வற்றின் வரு­கையின் கார­ண­மாக சட்டம், மருத்­துவத் துறை உள்­ளிட்ட பலதும் மாற்றம் கண்­டுள்­ளன. ஆகவே இந்த மாற்­றத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு எமது பயணம் அமைய வேண்டும். 
 2015 ஆம் ஆண்டு புரட்சி செய்தோம். இந்த ஆட்­சியின் வெற்­றியின் பய­னாக கடன் சுமையை நீக்கி புதிய யுகத்தை உரு­வாக்க வேண்டும். நல்­லாட்­சியை அமுல்­ப­டுத்தும் காரி­யங்­க­ளையும் புதிய யுகத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான சமூக மாற்று வேலைத்­திட்­டங்­க­ளையும் இரு வரு­டங்­களில் செய்து விட முடி­யாது. அவ­ச­ர­மாக தீர்­மா­னங்கள் எடுத்து விடவும் முடி­யாது. எனினும் எமது பயணம் வேகம் குறை­வாக இருந்த போதிலும் நல்­லாட்சி விழு­மி­யங்­களை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் அதனை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கு­மான பிர­தான அத்­தி­வா­ரத்தை இட்டு  செய­லாற்றி வரு­கின்றோம். 
அர­சி­யல்­வா­திகள் என்ற வகையில் குற்றம் இழைத்­தமை உறு­தி­யானால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வது பொது­வான ஜன­நா­யக பண்­பாகும். அது­மாத்­தி­ர­மின்றி உலகின் வழ­மை­யான நட­வ­டிக்­கை­யா­கவும் கருத முடியும். எனினும் குற்­றச்­சாட்டு இருக்கும் போது எவரும் அதி­கா­ரத்தை விடு­வ­தற்கு முனை­வது குறை­வாகும். முன்­னைய ஆட்­சியின் போது இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் எத­னையும் நாட்டு மக்கள் கண்­டுக்­கொள்­ள­வில்லை.
என்­றாலும் குற்­றச்­சாட்டு மாத்­திரம் முன்­வைக்­கப்­பட்ட தரு­வாயில் இரா­ஜ­னாமா செய்யும் வழி­மு­றையை நல்­லாட்­சி­யி­லேயே அறி­முகம் செய்து வைத்­துள்ளோம். நல்­லாட்சி வந்த பின்னர் இரு ‍அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா செய்­துள்­ளனர். இது பாரிய முன்­னேற்றம். எனவே எம்மால் முடிந்த அள­விற்கு நல்­லாட்­சியை அமுல்ப்­ப­டுத்­தி­யுள்ளோம். 
இதன்­படி தற்­போது குற்­றச்­சாட்­டுகள் மட்­டுமே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பான விசா­ரணை நிறை­வ­டைந்த பின்னர் குறித்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பான பூர்த்­தி­யான முடிவு வந்த பின்னர் பரி­சீ­லனை செய்து இறுதி தீர்­மானம் எடுப்போம். 
நல்லாட்சியையும் சிறப்பான யுகமொன்றையும் ஐந்து வருடத்தில் ஏற்படுத்த இயலாது. ஐந்து வருட காலப்பகுதிக்குள் ஆரம்ப அடித்தளத்தை இடமுடியும். முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் பத்து வருடங்கள் தேவையாகும். ஆகையால் ஐந்து வருடம் முடிந்த பின்னர் எமது ஆட்சி நீடிக்க வேண்டுமா என்பதனை மக்கள் தீர்மானிப்பர் என்றார்.

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post