சீன மருத்துவ உதவிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது


சீன கடற்படைக்குச் சொந்தமான மருத்துவ உதவிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
ஆர்க் பீஸ் எனும் பெயரிலான இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய ரீதியில் வரவேற்றுள்ளனர்.
மருத்துவ உதவி வழங்குவதற்குத் தேவையான சகல வசதிகளும் நவீன ஏற்பாட்டுடன் இக்கப்பலில் காணப்படுகின்றன. அத்துடன், அவசர தேவைகளின் போது தரையுடன் தொடர்புகொள்ள ஹெலிகொப்டர் இறங்கு தரையொன்றும் இக்கப்பலில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இக்கப்பல் எதிர்வரும் 09 ஆம் திகதி துறைமுகத்தை விட்டும் வெளியேறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.