தமிழ் தேசிய கூட்டமைப்பு ​கிழக்கு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது


கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் அரசியல் தலைமைகளின் ஏகாபத்திய போக்கை முறியடித்து கிழக்கு மாகாண சபையை தமிழ் மக்கள் கைப்பற்றவேண்டும். இதற்கு கிழக்கு அனைத்து தமிழ் மக்களும் அணிதிரளவேண்டுமென தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னனி கட்சி தலைவர் விநாயகமூர்தி முரளீதரன் (கருணா) தெரிவித்துள்ளார். 

தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னனி கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சி தலைமையத்தில் இடம்பெற்றது இதன் போது ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையிலே கருணா அம்மான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.