Aug 14, 2017

இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது.!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் நான்கு பேர் பருத்திதுறை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப் பட்டிருப்பதாகவும், இவர்களிடமிருந்து படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்பட்டிருப்பதாகவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள் தமிழகத்தின் நாகை மாவட்ட வேதார்ணயம் பகுதியை சேர்ந்தவர்களாவார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post