சமூர்த்தி கொடுப்பனவு பெறுவோர் கினிகத்தேனை பகுதியில் ஆர்ப்பாட்டம் . - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

சமூர்த்தி கொடுப்பனவு பெறுவோர் கினிகத்தேனை பகுதியில் ஆர்ப்பாட்டம் .

Share This(க.கிஷாந்தன்)


சமூர்த்தி கொடுப்பனவு பெறுவோர் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகரில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அட்டன் கொழும்பு, அட்டன் கண்டி ஊடான பொது போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டதுடன் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானதனையடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் வீதியை மறைத்து வாகனங்களை செல்லவிடாது கைகளால் தாக்கிய போதே இவ்வமைதியற்ற சூழல் உருவானது.

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் சமூர்த்தி உதவு தொகைகளை சமூர்த்தி பயனாளிகளுக்கு முறையாக வழங்காமலும், உதவு தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 04.08.2017 ன்று அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு முன்பாக சமூர்த்தி உதவு தொகை பெறும் சுமார் 700ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற இவ்ஆர்ப்பாட்டம் பேரணியாக கினிகத்தேனை நகரம் வரை சென்று மீண்டும் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு முன்பாக வந்தடைந்தனர்.

சமூர்த்தி உதவு தொகையாக கினிகத்தேனை பகுதி பிரதேசவாசிகளுக்கு அரசாங்கத்தினால் 2000 ரூபாய் தொடக்கம் 3500 ரூபாய் வரை உள்ளிட்ட உதவு தொகை பணம் கூப்பனாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவு தொகையில் சமூர்த்தி பயனாளிகளுக்கான நலன்புரி சேவைகளுக்காக ஒரு தொகை பணம் வெட்டப்பட்டு மிகுதி பணங்களை பயனாளிகளுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது.

இருந்தும் தற்பொழுது சமூர்த்தி உதவு தொகை பெறும் சில பயனாளிகளுக்கு இந்த உதவு தொகையை உரிய வேளையில் வழங்காமலும், நிறுத்தப்பட்டிருப்பதாகவும் சமூர்த்தி பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சமூர்த்தி உதவு தொகையை எமக்கு அரசாங்கம் வழங்கப்படும் என வழியுறுத்தியே சமூர்த்தி உதவு தொகை பயனாளிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அதன்பின் அம்பகமுவ பிரதேச செயலாளரிடம் சமூர்த்தி பயனாளிகளின் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. பின் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டமை குறிப்பிடதக்கது.Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE