இருதய சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்டென்ட்டின் விலை குறைப்பு


இருதய சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஸ்டென்ட்டின் விலையை குறைப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி நேற்று இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைய இந்த விலை குறைப்பு முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி பரிமெற்றல் ஸ்டென்டின் விலையானது 75 ஆயிரம் ரூபாவில் இருந்து 24 ஆயிரம் ரூபாவுக்கும் டிரக் இலுதின் ஸ்டென்டின் விலை 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவில் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.