மேற்கு, தெற்கு கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் – திணைக்களம்


இன்று (03) நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேடமாக சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கழுத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையியே அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடியதான வாய்ப்பு இருப்பதோடு, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் மழை பெய்யலாம் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி, காலி, கேகாலை, கண்டி, மாத்தறை, கழுத்தரை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.