செப்டம்பரில் மக்கள் பார்வைக்காக புதிய அரசியலமைப்பு !


புதிய அரசியலமைப்பு சட்ட மூலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மக்கள் பார்வைக்கு விடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அரசியலமைப்புச் சபையின் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் செப்டம்பர் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தேச சட்ட மூலம் தொடர்பிலான உப குழு அறிக்கை தற்பொழுது அச்சிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள 36 ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள காலப் பகுதியிலேயே, புதிய அரசியலமைப்பு தொடர்பான சட்ட மூலம் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படவுள்ளது. இந்த சட்ட மூலம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் செய்த் ராத் ஹுசைன் தனது கவனத்தைச் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.