நல்லாட்சியில் கல்விக்கு முன்னுரிமை - அமைச்சர் நஸீர்


சப்னி அஹமட்- 

மாணவர்களுக்கு கல்வியுடன் இணைந்து விளையாட்டுத்துறையையும் ஈடுபட வைப்பது பெற்றோர்களின் கடமையாகும், அது போல் இலங்கையின் நல்லாட்சி அரசி தற்போது கல்விக்கு அதிக கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றதை இட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

அக்கரைபற்று ரெயின்போவ் கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி (கலர்ஸ் டேய்) நேற்று மாலை (06) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;


இலங்கையில் நல்லாட்சி அரசு சுகாதாரத்துறையையும், கல்வித்துறையையும் அதிகமாக கவனத்திற்கொண்டு வருவதுடன் அதற்காக பல மில்லியன் கணக்கான நிதிகளை வழங்கி வருகின்றது. நல்லாட்சி அரசு தற்போது கல்வியை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்ல் பல திட்டங்களை வகுத்து வருகின்றது. கிழக்கு மாகாண கல்வியமைச்சும் அவ்வாறே கல்விக்கு முன்னுரிமை வழங்கு வருகின்றது. அவ்வாறு கல்விக்கு நாம் பல இடங்களை முன்னுரிமை வழங்கி அதற்கான உதவிகளுக்காக பேசியும் வருகின்றோம். ஜனாதிபதி தற்போது பல திட்டங்களை கல்வியமைச்சு ஊடாக மேற்கொண்டு செயற்படுவதை நாம் அவதானித்து வருகின்றோம். 

பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தஙகளது கல்விச்செயற்பாட்டில் மாத்திரம் ஈடுபடுவதையிட்டு மாணவர்களை விளையாட்டுத்துறையிலும் ஈடுபடவைப்பதன் மூலம் மாணவர்களின் மூளை வளர்சிக்கு பெரும் பங்கற்றும். அது போல் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் செய்வதற்காக எம்மால் ஏன்ற உதவிகளை வழங்குவதற்கு நாம் முயற்சி செய்கின்றோம். அது போல் பாலர் பாடசாலை மாணவர்களின் கல்வியே ஒரு மாணவனின் அஸ்திவரம் ஆகவே பாலர் பாடசாலை ஆசிரியர்கள் இம்மாணவர்களுக்கு அனைத்து துறையிலும் ஊக்கு விக்கும் அளவு செயற்பட்டு அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு செயற்பட வேண்டும்.

இதன் போது, கல்லூரியின் வளர்ச்சிக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீரினால் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 01 இலட்சம் ரூபாவினை கல்வி வளர்சிக்கு உதவியமைக்கு கல்லூரி நிருவாகத்தினரால் நன்றியினையும் தெரிவித்துக்கொண்டனர்.இதன் போது தங்களது திறமைகளை வெளிக்கொண்ட மாணவர்களுக்கு கிண்ணங்களை வழங்கி அமைச்சர் கெளரவித்தார்.--