ராஜிதவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

இலங்கை மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தகைமைகளைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிடத் தவறினால் அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.

தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.