விரைவில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் : அமைச்சர் ரவூப் ஹக்கீம்


ஐந்து வருட காலத்திற்குள் நீர் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படாததன் காரணமாக நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மாத்தறை நீர் வளங்கள் திட்டத்தின் நான்காவது கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீர் கட்டண திருத்தமானது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்றிருக்க வேண்டிய நிலையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அது நடைபெறாத நிலையில் ஐந்து வருடங்களாக நீர் கட்டண திருத்தம் நடைபெறவில்லை எனவும் அதன் காரணமாக உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் நாட்டின் பெரும்பாலானோர் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக கட்டண அதிகரிப்ப்பில் தாமதத்தை ஏற்படுத்துமாறு ஜனாதிபதியின் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.