கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கை வைத்தியர்கள்


சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் கறுப்புப்பட்டியணிந்து இன்று காலை முதல் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மூடும்படி தொழிற்சங்கங்கள் பல இணைந்து தேசிய எதிர்ப்புப் போரட்டங்களை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர்.
இப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே நுவரெலியா மாவட்ட வைத்தியர்கள் கைகளில் கறுப்புப்பட்டி அணிந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

டிக்கோயா, நுவரெலியா, லிந்துலை, கொட்டகலை, மஸ்கெலியா மற்றும் நானுஓயா ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.