வரிப்பத்தான்சேனையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து


இறக்காமம் பிரதேசத்திற்குட்பட்ட வரிப்பத்தான்சேனை ஹிங்குறாணை பிரதான வீதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவது,
வரிப்பத்தான்சேனை  பொது விளையாட்டு மைதானத்திற்கு அண்மித்துள்ள வரிப்பத்தான்சேனை ஹிங்குறாணை பிரதான வீதியில் இன்று (24)  காலை 08.55 மணியளவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 இவ்வனர்த்தம் ஹிங்குறாணையிலிருந்து அம்பாரை நோக்கி செல்ல வந்த கார் ஆனது பாதையில் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் அம்பாரையிலிருந்து சியம்பலாண்டுவ நோக்கி பயணித்த காருடன் நேருக்கு நேர் மோதியே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது

விபத்துக்குள்ளான வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், முந்திச் செல்ல முற்பட்ட வண்டி பாதையிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளது
இவ்விரண்டு கார்களினதும் பாதுகாப்பு பலூன்கள் உடன் செயற்பட்டதால் இரு வாகன ஓட்டுனர்களும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். ஒரு சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

விபத்துக்குள்ளான வண்டியில் ஓட்டுனர்களை தவிர வேறெவரும் பயணிக்கவில்லை எனவும் தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை தமணை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்.எம்.பாயிஸ்

வரிப்பத்தான்சேனை – செய்தியாளர்
 சிலோன் முஸ்லிம் கிழக்கு பிராந்திய காரியாலயம்