பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்காக இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்ற வாழ்வில் 40 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்காக விசேட பாராளுமன்ற அமர்வொன்று இன்று இடம்பெறவுள்ளது.
ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சேவையைப் பாராட்டி பாராளுமன்றத்தில் வாழ்த்துரை நிகழ்த்தவுள்ளனர்.
விசேட பாராளுமன்ற  அமர்வுக்கு முன்னர் இன்று காலை 9.15 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் பிரதமருக்கு ஆசி வேண்டி  வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
முன்னாள் சபைத் தலைவரும்  ஸ்ரீ ல.சு.க.யின் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான வாழ்த்துரையை சபையில் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.