இலங்கைக்குள் சட்டவிரோதமாக புகையிலை கடத்தியவர் கைது.!


போதைக்காக பாவிக்கப்படும் விஷேடமான புகையிலையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட புகையிலையானது இலங்கையிலுள்ள முதற்தர கலியாட்ட விடுதிகளில் மூக்குத்தூள் உறிஞ்சிக்குடிக்கும் விஷேட இயந்திரத்தினுள் செலுத்தி வாயுவாக நுகர்வதற்காக பயன்படுத்தப்படுவதாக சுங்கப்பிரிவு ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
இன்று (14) காலை 6 மணியளவில் டுபாயிலிருந்த வந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானம் மூலம் சட்டவிரோதமாக புகையிலையை இலங்கைக்குள் குறித்த இளைஞர் கொண்டு வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 26 வயதுடைய குறித்த இளைஞர் 1600 புகையிலை பக்கட்களை தனது பயணப்பொதியினுள் வைத்து கொண்டு வந்துள்ளார். 
இதன் பெறுமதி ரூபாய் 25 இலட்சம் என சுங்கப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்