Aug 12, 2017

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்


தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி மக்களுக்கு பொய் கூறும் வேலையினை ஆரம்பித்துள்ளது.இந்த நாட்டில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள அரசியல் தலைவர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசும் பொருளாக மாறியுள்ளதை யாவரும் நன்கு அறிந்து கொண்டுள்ள விடயமாகும்.இவ்வாறான பின்னணியில் தொடர்ந்தும் சில கூலிகள் அமைச்சர் றிசாத் பதியுதீனை இலக்கு வைத்து தொடரான தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றன.

அண்மையக் காலமாக அமைச்சர் றிசாத் பதியுதீன் வில்பத்தினை ஆக்கிரமித்து அதில் வெளிமாவட்ட மக்களை குடியேற்றி இஸ்லாமிய கொலணியொன்றினை அமைக்க முயற்சிக்கினறார் என்ற குற்றச்சாட்டை இனவாதிகள் மு வைத்து கோஷம் எழுப்பிய போது அதற்கு ஊதுகுலலாக குவைதிர்கான் என்ற நபரும் இருந்த வந்துள்ளதை அவரினால் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக தெரிவித்து வரும் கருத்துக்களிலும்,பொறுப்பற்ற பொய்யான விமர்சனங்களில் இருந்தும் அறிந்து கொள்ள முடிகின்றது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்தில் தாராபுரம் என்னும் கிராமத்தில் பிறந்து கல்வி கற்று உயர் கல்வியினை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தவர்.அவரது கல்வி செயற்பாடுகள் பல நாறு இளைஞர்களின் விமோசனத்திற்கு துணைபோயுள்ளது.கொழும்பு சாஹிரா கல்லாரியில் கல்வி போதித்தவர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.அரசியலுக்குள் வலிந்து இழுத்தெடுக்கப்பட்டவராகவே அமைச்சர் றிசாத் பதியுதீனை அடையாளப்படுத்த முடியும்.வடக்கில் வாழ்ந்த குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் தான் உட்பட கலிமாச் சொன்ன தமது சமூகம் வெளியேற்றப்பட்ட போது அந்த வலிகளையும்,வேதனைகளையும் சுமந்து வந்த நிகழ்வுகள் அவரது உள்ளத்தில் ஆறா வடுவாக பொதிந்து காணப்பட்டது.இந்த வலிகளின் வெளிப்பாடு றிசாத் பதியுதீன் என்கின்ற ஒரு மனிதனை அரசியலுக்குள் இழுத்துவந்தது.

இந்த மனிதன் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நிழலாக நின்று செயற்படுவதை பொருத்துக் கொள்ள முடியாத கருமை உள்ளம் கொண்டவர்கள் பல்வேறு சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளின் போதும் துணிந்து இஹ்லாசுடன் முன் நின்று அவற்றை எதிர்த்து நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் ஒரு அரசியல் வாதியாக அமைச்சர் றிசாத் பதியுதீனை எல்லொரும் அடையாளப்படுத்திவரும் இந்த சந்தர்ப்பத்தில் முதுகெலும்பு இல்லாத அரசியல் வாதிகள் என்று கூறிக்கொண்டிருக்கும் சிலர் அவர்களது கைக்கூலிகளை வைத்துக் கொண்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்ப்ப்பாடு செய்வதும்,அத்தோடு மட்டுமல்லாமல் ஊடகங்களில் வந்து குரங்கு சேஷ்ட்டையினை காட்டுவதும் தொடர்கதையாகவே இருக்கின்றது.

அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கும் அரசியல்வாதியின் செய்றபாடுகள் 90 சதவீதம் சமூகத்திற்காகவும் 10 சதவீதம் தமது குடும்பத்திற்காகவும் சிந்திக்கும் ஒருவராகவே இருப்பார்.அந்த குணாதிசயங்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் இடத்தில் காணமுடிகின்றது.

அரசியல் அதிகாரம் என்பது இறைவனினால் கொடுக்கப்பட்ட அமானிதமாகும்,தனக்கு கேள்வி கணக்குகள் இறைவனிடத்தில நிச்சயம் உண்டு என்கின்ற நம்பிக்கைக்கு அப்பால் சமூகம் சார்ந்த விடயங்களை கையாளுகின்ற போது இதனை விட பலநாறு மடங்கு இறைவனுக்கு பதிலிருக்க வேண்டும் என்ற அச்சம் கொண்ட ஒரவராகவே அமைச்சர் றிசாத் பதியுதீன் இருக்கின்றார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உண்டு.

இப்படிப்பட்ட நேர்மை மிகு ஒரு மனிதருக்கு எதிராக இல்லாத பொல்லாதவைகளை சோடித்து அபாண்டங்களை தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று அடம்பிடிக்கும் அறிவிலிகள் மேற்கொள்ளும் சதிகளுக்கு எதிராக அல்லாஹ்வின் சோதனை நிச்சயம் வரும் என்பது எமது நம்பிக்கையாகும்.

மீண்டும் வேதாளம் என்று ஆரம்பத்தில் நான் எழுதிய விடயத்தினை இப்போது சுட்டிக்காட்டுவது பொருத்தமென கருதுகின்றேன்.அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக மன்னாரை சேர்ந்த குவைதிர்கான் என்பவர் தொடராக லஞ்ச ஊழ் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்வதும்,இது தொடர்பில் தனக்கு தானே விளம்பரத்தை ஏற்படுத்துவதும்,அமைச்சரின் உண்மை அன்பர்களை இதன் மூலம் ஆத்திரமடையச் செய்வதும்,அதன் மூலம் இன்னுமொரு அரசியல் கட்சியினருக்கு செல்வாக்கை பெருக்கலாம் என்ற நற்பாசையில் செயற்படுவதும் இவரது வாழ்க்கையாகும்.இந்த வேலைகளுக்காக இவரை சந்தோஷப்படுத்தும் விடயங்களும் ஊடகத்தில வலம் வரும் உண்மைகளாகும்.இந்த குவைதிர்கான் என்பவர் எமது முஸ்லிம் சமூகத்திற்கு எந்த விதத்தில் ஒரு சதத்திற்கேனும் பிரயோசனம் இல்லாதவர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனஅதே வேளை இவர் பற்றி மன்னார் மக்கள் அக்குவேராக ஆணிவேராக கூறும் கதைகளும் உண்டு.

இதனை கூறி அவரை மலினப்படுத்த வேண்டிய தேவைப்பாடுகள் எமக்கில்ல இறால் தன் தலைக்கும் அசுத்த்த்தை வைத்துக்கொண்டு நாற்றத்தை பற்றி பேசுவது அறிவுள்ளவர்களுக்கு இதன் யதார்த்தம் புரியும் என நம்புகின்றேன்.இப்படியான ஒரு நிலையில் இருக்கும் ஒருவர் இந்த சமூகத்திற்கு பணியாற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் கூறுவது மலைக்கும் மடுவுக்கும் போன்றதாகும்.இருந்த போதும் இவரது விமர்சனங்கள் தொடர்பில் தொடராக மௌனித்தால் அமைச்சரின் சமூக பணியில் இணைந்து இருக்கும் எம்மை போன்றவர்களுக்கு நெஞ்சு பொருத்திருக்காது என்பதை உணர்ந்ததால் இந்த விடயங்களை நாமும் சமூக மயப்படுத்த வேண்டி கடமையுள்ளது.

எழுத்துக்களால் உண்மை சொல்ல முடியும் என்பது நாம் கற்றது.அதற்கு உணர்வு இருக்கின்றது,உயிர் இருக்கிறது.இந்த உண்மைகள் ஒரு போதும் மரணிப்பதில்லை அவை முளைத்து மரமாய் ஏன் ஆள விருட்சமாய் நிழல் கொடுக்க வேண்டும் என்பது எமது ஆசையாகும்.அதற்காக நாம் பேச வேண்டியுள்ளது.

இந்த குவைதிர்கானின் குற்றச்சாட்டுக்களில் முசலி பிரதேச மக்களுக்கு வெளிநாட்டு நிதியுதவியுடன் கட்டப்பட்ட வீடுகள் தொடர்பிலானதும் இருக்கும் என நம்புகின்றேன்.இந்த வீடுகளை இங்கு அமைப்பதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுத்த முயற்சிகளை இந்த குவைதர்கான் அறியமாட்டார்.அதுவும் இந்த குவைதிர்கானினால் இந்த மக்களுக்காக ஒரு வீட்டைக் கூட அவர் ஆதரிக்கும் அந்த கட்சியினராலோ அல்லது அவரினாலோ கட்டிக்கொடுக்க முடியாத வக்கற்ற நிலையில் மக்களுக்கு அமைச்சர் பெற்றுக்கொடுத்துள்ள வீடுகள் தொடர்பில் குறை கூறித்திரிவதன் அவரது பின்னணி என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இந்த வீடுகளை அமைப்பதில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது அரசசார்பற்ற நிறுவனமொன்றினைபயன்படுத்துவதாக குவைதர்கானின் அடுத்த குற்ற சாட்டாக இருக்கும் என நம்புகின்றேன்.அரச சார்பற்ற நிறுவனம் என்பது அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட தொன்றாகும்.அவர்கள் அதனது சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.அவர்களது திட்ட செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க வேண்டியது அரச சார்பற்ற நிறுவனத்தின் கடமையாகும்.அதனை அவர்கள் சரிவரச் செய்வார்கள்.

இந்த அரச சார்பற்ற அமைப்பினை பதிவு செய்யப்பட்டிருக்கும் பட்டியலில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பெயர் இல்லையென்பதை தெளிவாக சொல்ல வேண்டும்.அமைச்சரின் சகோதர்ரகள் அல்லது குடும்பத்தினர் நேர்மையான முறையில் தொழில்,செய்ய கூடாது என்று இந்த குவைதர்கான் சொல்லுவது ஆச்சரியப்படும் விடயமல்ல ஏனெனில் குவைதிர்கானின் கண்களுக்கு எல்லாம் குருடனாகத்தான் தெரியும் என்பதை அவரது அறிக்கைகளில் இருந்து நன்கு புலப்படுகின்றது.

அமைச்சர் றிசாத் பதியுதீனின் செயற்பாடுகளை எவர்கள் எப்படி விமர்சித்தாலும் அவரது பணிகைள் அல்லாஹ்வின் உதவியினால் தொடரும்,அதற்கு த்தேவையான பலத்தினை நிச்சயமாக அல்லாஹ் கொடுப்பான்.இது முஸ்லிமான இருபாலாரினதும் நம்பிக்கையாகும்.இதற்கு மாற்றமாக சிந்தித்து பொய்யினை உண்மையாக கூறுவதற்கு பலவேறு உத்திகளை கையாளும் நபர்களின் முயற்சிகளை அல்லாஹி படுதோல்வி அடையச் செய்வான் என்பது யதார்த்தமாகும்.
அப்பாவி மக்களை உசுப்பேத்தி அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை தடுத்து இல்லாமல் ஆக்க இந்த குவைதிர்கான் போன்ற புல்லுருவிகள் எத்தனைபேர் முளைத்தாலும் அத்தைனைபேர்களையும் இனம் காட்டி அவர்கள் இந்த மக்களின் காலடிக்கு செல்லும் சந்தர்ப்பத்தினை இறைவன் ஏற்படுத்துவான் அப்போது இந்த மக்கள் இவர்களுக்கு தகுந்த பதிலினை வழங்குவார்கள்.ஒருவனிடத்தில் இல்லாத ஒரு குறையினை பொய்யாக இருப்பதாக கூறினால்,அது அவனிடத்தில் இல்லத போது கூறியவனை அது வந்த சேரும் என்பது நபியுடைய அமுதவாக்காகும்.
நன்றி


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network