மகாவலி திட்டத்தில் குடியிருப்பவர்களுக்கான காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு நாளை

மகாவலி திட்டத்தில் குடியிருப்பவர்களுக்கு ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் வளவை மற்றும் மகாவலி “எச்“ வலய விவசாயிகளுக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு 11, 12 ஆம் திகதிகளில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
மகாவலி குடியேற்றவாசிகள் நீண்டகாலமாக முகம் கொடுத்துத்துவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கி ஒரே தடவையில் கூடுதலானோருக்குக் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு இதுவாகும். வளவை விவசாயிகளுக்கான உறுதிகள் 11 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு எம்பிலிப்பிட்டிய கம்உதாவ விளையாட்டரங்கிலும், “எச்“ வலய விவசாயிகளுக்கான உறுதிகள் 12 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு தலாவ பிரதேச சபை விளையாட்டரங்கிலும் ஜனாதிபதி தலைமையில் வழங்கப்படவுள்ளன.
அனைத்து இலங்கையர்களுக்கும் தமக்கென காணி மற்றும் வீட்டு உரிமை இருக்க வேண்டும் எனும் கொள்கைக்கமைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கேற்ப இந்தக் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் அந்த மக்களின் வாழ்க்கை ஒளிபெறுவதுடன், பொருளாதார சுபிட்சத்தை அடைவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.