சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர்


சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் திவுலப்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 48 லீட்டர் சட்ட விரோத மதுபானமும் கோடா 202 லீட்டரும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள 37 வயதான திவுலப்பிட்டியைச் சேர்ந்த சந்தேக நபரை இன்று (05) மினுவாங்கொட மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.