துன்னாலைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை

வடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்து இரு ஹன்ரர் ரக வாகனங்களும், 5 மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்களிலும் அந்தப் பகுதிகளில் ரோந்தில் ஈடுபடுகின்றனர். மக்கள் பெரும் அச்சமடைந்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.
Powered by Blogger.