உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு பதுளையில் மீட்பு


முச்சக்கர வண்டியின் சாரதியொருவரிடமிருந்து கைக்குண்டொன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
நேற்று (19) பிற்பகல் பதுளை, பஸ்ஸர பாதையில் 06 கட்டை தேவாலயத்துக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பஸ்ஸர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், குறித்த கைக்குண்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.