வசீம் தாஜூடீன் கொலை: முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியை கைது செய்ய முடியும்


ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை வழக்கின் மற்றுமொரு சந்தேக நபராக முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்ய முடியும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (24) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சார்பாக ஆஜராகியிருந்த அரச தரப்பின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மூலம் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம் மூலம் கிடைக்கப்பெற்ற தேடல் ஆணையைத் தொடர்ந்து வசீம் தாஜூடீனின் எலும்புக்கூட்டுப் பகுதிகள் காணாமல் போனமை தடர்பில் தொடர்ச்சியான விசாரணை நடைபெறுவதாக குறிப்பிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர வை கைது செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.