அட்டன் நகரில் சில்லறை வர்த்தக நிலையம் உடைத்து திருட்டு பொலிஸார் பல கோணங்களில் விசாரணை(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் நடுப்பகுதியில் அமைந்துள்ள சில்லறை கடை இன்று 14.08.2017 அதிகாலை சுமார் 1 மணியளவில் திருடன் ஒருவனால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரல் தெரிவித்தனர்.

இத்திருட்டு சம்பவத்தின்போது சிகரட், கையடக்க தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள், காசு போன்றன திருடனால் திருடப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட மொத்த பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருடன் பின்புறத்தில் உள்ள இரும்பு ஜன்னல், இரும்பு கதவு போன்றன உடைத்து சிவிலின் வழியாக கடைக்கு நுழைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது திருடன் உட்புகுந்து திருடும் சம்பவம் உட்பபட அனைத்தும் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாக அட்டன் கைரேகை அடையாளப்பிரிவு, அட்டன் மோப்ப நாய் பிரிவு உட்பட விசேட பொலிஸ் குழுக்கள் இத்திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் நடுப்பகுதியில் அமைந்துள்ள சில்லறை கடை 14.08.2017 அன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் திருடன் ஒருவனால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரல் தெரிவித்தனர்.

இத்திருட்டு சம்பவத்தின்போது சிகரட், கையடக்க தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள், காசு போன்றன திருடனால் திருடப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட மொத்த பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருடன் பின்புறத்தில் உள்ள இரும்பு ஜன்னல், இரும்பு கதவு போன்றன உடைத்து சிவிலின் வழியாக கடைக்கு நுழைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது திருடன் உட்புகுந்து திருடும் சம்பவம் உட்பபட அனைத்தும் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாக அட்டன் கைரேகை அடையாளப்பிரிவு, அட்டன் மோப்ப நாய் பிரிவு உட்பட விசேட பொலிஸ் குழுக்கள் இத்திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.