அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நாம் செய்யும் நன்மைகளும் தீமைகளாகவே தெரிவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கண்மூடித்தனமாக குறைகூறுபவர்கள் நாம் செய்துள்ள மாற்றங்களை பற்றி சிந்திக்காமைக்கு நாம் என்ன செய்ய முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுகாதாரத்துறையை தனியார்மயப்படுத்த நாம் எத்தணிக்கவில்லை. திறந்த பொருளாதார கொள்கைகளுக்கேற்ப ஏனைய உலக நாடுகளுடன் போட்டியிடவே தயார்படுத்துகின்றோம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

Share The News

TODAYCEYLON

Post A Comment: