Aug 4, 2017

ஆசிரியர்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்படும் – ஜனாதிபதி

ஆசிரியர்கள் நல்ல மனநிலையுடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுராதபுரம் வலிசிங்க சரத்சந்ர மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிட தொகுதியை இன்று (04) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி அவர்களது அறிவை மேம்படுத்துவதற்காக அதிபர், ஆசிரியர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு ஒருபோதும் சம்பளத்துக்கு என மட்டுப்பட்டதல்ல என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் துமிந்த திசாநாயக்க, வடமத்திய மாகாண ஆளுனர் பி.பீ.திசாநாயக்க, முதலமைச்சர் பேஷல ஜயரத்ன உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network