அரசியல் லாபங்களுக்காக வரலாற்று தவறென்றை புரிய வேண்டாம்: கல்முனை மாநகரை பாதுகாப்போம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

அரசியல் லாபங்களுக்காக வரலாற்று தவறென்றை புரிய வேண்டாம்: கல்முனை மாநகரை பாதுகாப்போம்

Share Thisபைசர் முஸ்தபா,ஹக்கீம் ,ரிசாட், போன்ற அமைச்சர்களுக்கு இன நல்லுறவுக்கும் பிரதேச ஒருமைப்பாட்டுக்குமான அமைப்பு வலியுறுத்து.

தற்போதைய கல்முனை மாநகரமானது பல்லின மக்கள் வாழும் வாழப்போகும் பிரதேசமாகும், மாத்திரமல்லாமல் நான்கு தனித்துவ உள்ளூராட்சி  மன்றங்களான 
1. கரவாகுபற்று தெற்கு
2.கல்முனை பட்டின சபை
3.கரவாகுபற்று மேற்கு
4.கரவாகுபற்று வடக்கு 
இவைகள் இணைக்கைப்பட்டே பிரதம அமைச்சராகவும் உள்ளூராட்சி அமைச்சராகவும் பிரமதாச இருந்த போது 1987 ம் மாண்டு கல்முறை பிரதேச சபை உருவாக்கப்பட்டது
பின்னர் பட்டின சபையாகவும் அதன் பின் மாநகர சபையாகவும் இன்று வரை இருந்து வருகின்றது.

இந்த சூழ்நிலையில் சாய்ந்தமருது எனும் கரவாகுபற்று தெற்கு பிரிந்து செல்ல வேண்டுமென்பதில் எந்தவித தவறும் கிடையாது.ஆனால் ஏனைய மூன்று உள்ளூராட்சி சபைகளும் பிரிந்து செல்லும் உரிமை வழங்கப்பட வேண்டு்ம், அப்போதுதான் அறியாச் சிக்கலுக்குள் மாட்டி இருக்கின்ற கல்முனையின் தமிழ் முஸ்லீம் மக்கள் நிம்மதி யாக உலகம் முடியும் வரை வாழ்வதற்கான வழியை பெற்றுக் கொடுப்பதற்கான பொறுப்பு இருக்கின்றது.

இவ்வாறு நேற்று (15) கல்முனையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இன நல்லுறவுக்கும் பிரதேச ஒருமைப்பாட்டுக்குமான அமைப்பினர் தெரிவித்தனர்
இதன் சார்பாக கல்முனையின் சமுக ஆர்வலர் நஸீர் ஹாஜி மற்றும் கலாநிதி எஸ்.எல். ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கருத்து வெளியிடுகையில்
கல்முனையின் இன்று வாழுகின்ற மக்களின் இனப்பரம்பலின் விகிதாசார சமநிலையை குழைக்கப்படாமல் பாதுகாக்க வேண்டிய தேவை எங்களுக்கிருக்கின்றது.
ஏன் மருதமுனைக்கு நகர சபை வழங்க முடியாது?
தமிழர்களுக்கு நகரசபை ஒன்றை வழங்க முடியாது?

இதன் மூலம் அங்கு வாழுகின்ற எல்லா மக்களுக்கும் வளம் கொழிக்கும் என்பதில் எந்த வித ஐயமும் கிடையாது
தக்க தருணத்தில் நான்கு சபைகள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் அதன் யதார்தத்தை மக்களை விடவும்  மனச்சாட்சியான அறிவுடைய தலைவர்களாக இவர்கள் இருப்பின் இவர்களுக்கு இருக்க வேண்டுமென்பதே எமது எதிர்பா்ப்பாகும்.
அரசியல் லாபங்கள் இந்த சமுகத்தை வாழ வைக்காது
போலி வேசங்கள் களையப்பட்டு சுயரூபம் வெளிவரும்.

அப்பாவி சாய்ந்தமருது மக்களின் ஐந்து அல்லது ஆறாயிரம் வாக்குகளை பெறும் எண்ணத்தில் ஒட்டு மொத்த மக்களையும் ரிசாட்டும் , ஹக்கீமும் சமுகத்தின் மீது விளையாட வேண்டாம்
இவற்றை கலந்தாலோசனை நடாத்தி முடிவுகள் பெறாமல் போனால் உயர் நீதிமன்றம் செல்ல நாம் ஆலோசித்து வருதாக  குறிப்பிட்டனர்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE