மீண்டும் இலங்கை அணிக்கு திரிமான்ன மற்றும் சந்தகன்


இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளான சகலதுறை வீரர் அஸேல குணரத்ன மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் ஆகியோருக்கு ஓய்வூ வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அஸேல குணரத்னவுக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் லகிரு திரிமான்னவும், சுரங்க லகமாலுக்கு பதிலாக லக்ஷான் சந்தகனும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.