ஜனாஸா அறிவித்தல்


ஜனாஸா அறிவித்தல். வரிப்பத்தான்சேனை – 03 ம் பிரிவு மஜிதுபுரத்தைச் சேர்ந்த யூசூப்லெவ்வை செமிலத்தும்மா (சக்கீனா உம்மா) அவர்கள் இன்று (2017.08.05) அதிகாலை 3.00 மணியளவில் காலமானார்கள்.(இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி றாஜிஊன்) சிறிது காலம் சுகவீனமடைந்த அவர் கடந்த 4 நாட்களாக அம்பாரை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அன்னார் புதல்வர்களான நிசார்,பாறூன்,அமீன்,நஸீர்,றிஸ்வான்(கபீர்),பஸ்மின், புதல்விகளான ஜாரியா,றிபாயா,சமினா,பிலோமியா,ஆகியோர்களின் அன்புத் தாயாருமாவார்.  அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று லுஹர் தொழுகையின் பின் வரிப்பத்தான்சேனை மஜிதுபுர பொது மையவாடியில் நடைபெறும் என்பதாக குடும்பத்தினரால் அறியத்தரப்பட்டுள்ளது.

ற.முஹம்மது பாயிஸ்
(வரிப்பத்தான்சேனை செய்தியாளர்)