விஜேதாசவுக்கு ஆதரவு, பைஸருக்கு எதிர்- மஹிந்த குழு

அரசாங்க தரப்பினால் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவும், அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவும் கூட்டு எதிர்க் கட்சி கையை உயர்த்தும் என இரத்தினபுரி பாராளுமன்ற ரஞ்ஜித் சொய்ஷா தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான விஜேதாச, பைஸர் முஸ்தபா ஆகிய இருவருக்கு எதிராக அரசாங்க தரப்பினாலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சொய்ஷா எம்.பி.யிடம் வினவிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
நாம் விஜேதாசவுக்காக குரல் கொடுப்போம். விஜேதாச ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷவையும் கொள்கைக்காக விமர்ஷனம் செய்தார். அவர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து வெளியோறியதும் கொள்கைக்காக. இவ்வாறான ஒருவருக்கு எதிராக அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதாக இருந்தால், அதனை நாம் எதிர்க்கின்றோம்.
விஜேதாசவின் கொள்கை அரச சொத்துக்களை விற்கக் கூடாது என்பதாகும். அவரது கொள்கையை நாம் மதிக்கின்றோம்.
அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால், அதற்கு ஆதரவாக அரசாங்க தரப்புடன் சேர்ந்து நாம் கையை உயர்த்துவோம் எனவும் சொய்ஷா மேலும் கூறியுள்ளார்.