புகையிரத திணைக்களம் தனியார் மயப்படுத்தப்படும்


புகையிரத பணியாளர்கள் தொடர்ந்து பணிநிறுத்தங்களை முன்னெடுக்கப்பட்டால் புகையிரத திணைக்களமானது தனியார் மயப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல்ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறந்த புகையிரத சேவைகளுக்காக சகல தொழிற்சங்கங்களும் புதிய பணிப்பாளருக்கு தமது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் தான் போக்குவரத்து அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தொழிற்சங்க பிரச்சினைகள் பலவற்றிட்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் நிமல்ஸ்ரீபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.