ரவி கருணாநாயக்க பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்

முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய ரவி கருணாநாயக்க இந்த அறிவிப்பை மேற்கொண்டார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை, ரவி கருணாநாயக்க மீது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றையும் சபாநாயகரிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.