பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை நுளம்புகளிடமிருந்து பாதுகாக்குமாறு வேண்டுகோள்


ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை, பரீட்சை நடைபெறும் தினங்களில் நுளம்புகளிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்க நுளம்புக்கடி தடுப்பு பூச்சுக்களை பூசி அனுப்புமாறு பரீட்சை திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடெங்கிலும் உள்ள இரண்டாயிரத்து 230 பரீட்சை நிலையங்களில் ஆகஸ்ட் 8ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெறும். புலமைப்பரிசில் பரீட்சை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் ஆகஸ்ட் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது.