ஞானசார தேரரை மிஞ்சும் சுமனரத்ன தேரர்.


(அ. அஹமட்)

மீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு நிலவிவருகிறதுஇந்ந முரண்பாட்டை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திய மட்டக்களப்பு மங்களராமவிகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தைபிரயோகத்தை கையாண்டிருந்தார்இப்படியான கீழ்த்தரமான வார்த்தை பிரயோகத்தை ஞானசார தேரர் கூடபாவித்திருக்கவில்லை எனக் கூறினாலும் தவறாகாது.

குறித்த தேரர் ஞானசார தேரரின் நெருங்கிய சகாவாகும் என்பது யாவருக்கும் தெரியும்ஞானசார தேரர்அடக்கப்பட்டிருந்தாலும் அவரின் மூலம் நிகழ்த்தப்பட்ட இன வாத நிகழ்ச்சி நிரல்கள் டான் பிரசாத் மற்றும்இவ்வாறான தேரர்களால் முன்னெடுக்கப்படுகிறதுஇதனை இவ்வரசு கட்டுப்படுத்தாமல் வேடிக்கைபார்க்கின்றது.

இது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைஇதில் இவர் மூக்கை நுழைக்க வேண்டியஅவசியமில்லைஅல்லது இவருக்கு அனைத்து பிரச்சினைகளின் போதும் தலையிட்டு தீர்வைபெற்றுக்கொடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்இவ்வரசு மறைமுகமாக இவ் அதிகாரத்தைவழங்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைஇந் நாட்டின் அதிகாரம் பௌத்த அடிப்படைவாதிகளின்கைகளில் படிப்படியாக சென்று கொண்டிருப்பதை இதனூடாக அறிந்துகொள்ளலாம்.

குறித்த தேரர் பிரச்சினை எழுந்த இடத்தில் நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார்இதற்கு முன்பும் ஒருதடவை அவர் நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார்பௌத்த தேரர்களுக்கு நீதி மன்ற உத்தரவைகிழித்தெறியும் வகையிலான சட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்ற அச்சம் எழுகிறதுஇவரின்செயற்பாடானது இலங்கை நீதிதுறையின் செயற்பாட்டை பலவீனப்படுத்துகிறதுஇதுவெல்லாம் இலங்கைநாட்டுக்கு சிறந்ததல்ல.