அமைப்பாளர் றபீழின் முயற்சியினால் காவத்தமுனை மத்திய மருந்தகம் கிராமிய வைத்திய சாலையாக தரம் உயர்வு…


 அஹமட் இர்ஷாட்
ஓட்டமாவடி

 கல்குடா ஓட்டமாவடி காவத்தமுனையில் இயங்கி வருகின்ற அரசாங்க மத்திய மருந்தகமானது கிராமைய வைத்தியசாலைய தரமுயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக கல்குடா தொகுதி சிறீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீழ் தெரிவிக்கின்றார்.
 புதிதாக கிழக்கு மாகான ஆளுனராக பதிவியேற்றுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித்த போக்கொள்ளாகமவிடம் றபீழினால் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு குறித்த காவத்தமுனை மத்திய மருந்தகம் அமையபெற்றுள்ள இடம் சம்ம்பந்தமான மதிப்பீட்டறிக்கையினை சமர்பிக்குமாறு ஆளுனரின் செயலாளரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

  மேலும் குறித்த பணிப்புரையில் குறித்த மருந்தகத்தினை சகல வசதிகளையும் கொண்ட கிராமிய வைத்திய சாலையாக தரமுயர்த்துவதுடன், அதற்கு தேவையான கட்டங்கள், வைத்தியர், தாதிமார்கள், ஏனையா ஊழியர்கள், மற்றும் ஏனைய ஆளணிகள் சம்பந்தமாக மதிப்பீட்டறிக்கையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் கேட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு குறித்த மருந்தக தரமுயர்த்தப்படுவதினால் காவத்தமுனை பிரதேசத்தில் நிலவி வருக்கின்ற வைத்திய ஏனைய சுகாதார பிரச்சனைகள், தூர பிரதேசங்களுக்கு வைத்திய சேவையினை நாடி செல்லுதல், நிரந்தரமாக வைத்தியர் ஒருவர் மருந்தகத்தில் கடமையில் ஈடுபட முடியாமல் இருப்பது, அத்தியவசிய தேவையாக உள்ள வைத்திய சேவையினை 24 மணி நேரமும் காவத்தமுனை மக்களினால் பெற்றுகொள்ள முடியாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விடயமாகும்.