உணவு விழிப்பூட்டல் கருத்தரங்கு


அரசாங்கத்தின் தேசிய செயற்திட்டத்திற்கு அமைவாக மக்களுக்கு போசாக்கு நிறைந்த உணவுபாவனை சம்பந்தமான பிரதேச உணவு செயல்முறை குழு கூட்டம் அரச உத்தியேகத்தர்களுக்கு  நேற்று 2017.08.11ம் திகதி இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நசிர் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி,  மாவட்ட விவசாய பணிப்பாளர்,   இறக்காமம் கால்நடை வைத்திய அதிகாரி என பலரும் கலந்து கெண்டு மக்களுக்கு நிறைவான மற்றும் பாதுகாப்பான உணவுப்பாவனை சம்பந்ததமான விழிப்பூட்டல்  கருத்துக்களை  முன்வைத்தனர்.  

ஏகே.அஸ்வர் 
( இறக்காமம் செய்தியாளர்)