Aug 15, 2017

‘கிழக்கை “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்’

எம்.எம்.அஹமட் அனாம்  
“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதில் யாரும், எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. கடந்த முறை நாங்கள் தனித்துக் கேட்டோம். தைரியமாகத் தனித்துக் கேட்க எடுத்த முடிவு தான் அதை முறியடிக்க ஏறாவூரிலே தலைமையைக் கேட்காமல் பதவி துறந்தார்” என்று, நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.  
“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதுடன் மட்டுமன்றி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையை உள்ளுராட்சி தேர்தலில் கைப்பற்றும்” என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.  
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் கணக்காளருமான எச்.எம்.எம்.றியாழ் தலைமையில் ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ். வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அபிவிருத்தியை நோக்கிய மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய அரசியல் அதிகாரம் என்பது, கடந்த கால ஆட்சிகளிலே பெரும் போடுகாய்களாக எங்களுடைய கட்சியைக் காப்பாற்றுவதற்கு, நாங்கள் போய் ஒரு சரணாகதி அரசியல் செய்கின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்ட காலங்களில் வருகின்ற போது, கட்சி போராளிகள் தைரியமாக இருக்கின்றார்கள் என்றே வந்தோம்.  
கல்குடா, காத்தான்குடியில் தாங்கள் அபிவிருத்தி செய்தோம் எனக் கூறும் அமைச்சர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை காட்டிக் கொடுத்து தான் அரசியல் செய்தார்கள். எனவே அதில் முஸ்லிம் காங்கிரஸுக்குப் பங்கு உள்ளதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை விரட்ட வேண்டும் என்றுதான் அந்த அந்த ஆட்சியாளர்களிடம் இருந்து இவற்றையெல்லாம் கொண்டு வந்தனர். கிழக்கு மாகாணத்தில் அரசியல் அந்தஸ்த்தில் உள்ள அனைவரும் முஸ்லிம் காங்கிரஸின் அறிமுகத்தில் வந்தனர். காங்கிரஸை ஒரு பிஸாசாகக் காட்டி, தங்கள் பிரதேசத்துக்கு அபிவிருத்தியைக் கொண்டு வருவதன் மூலம் கட்சியை இல்லாமல் செய்ய வேண்டும் என்று பல விதமாக இந்த விடயங்களை செய்கின்றனர்.  
முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) செய்த வேலைகளை தற்போதைய முதலமைச்சர் நசீர் அஹமட் செய்யவில்லை என்று சொல்லப்பட்ட விவகாரத்தில் ஒன்றை அவர்கள் மறந்து விடக் கூடாது.  
பிள்ளையான் முதலமைச்சராக வருவதற்கு முன்னர் முஸ்லிம் முதலமைச்சரை கொண்டு வருவோம் என்று காங்கிரஸுக்கு கடைசி நேரத்தில் கழுத்தறுத்துப் போன காத்தான்குடி அரசியல் பிரமுகருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு வந்த ஆட்சியில், கூடுதலாக முஸ்லிம் உறுப்பினர்களுடன் வந்தால் முதலமைச்சர் தருவேன் என்று, மஹிந்தவிடம் பொருத்தம் எடுத்து விட்டு போய் தான் அந்த ஆட்சியை கொண்டு வந்தார்கள். இதனை முறியடிக்க எனது நாடாளுமன்ற ஆசனத்தை துறந்தேன்.  
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்பதில் யாரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. கடந்த முறை நாங்கள் தனித்துக் கேட்டோம். தைரியமாகத் தனித்துக் கேட்க எடுத்த முடிவு தான் அதை முறியடிக்க ஏறாவூரிலே தலைமையை கேட்காமல் பதவி துறந்தார்.  
அந்த பெரிய சாகச வித்தைகள் எல்லாம் செய்து காட்டி, முதலமைச்சர் நசீர் அஹமட் கட்சிக்குள் நுழைந்த போது கட்சியை தோற்கடிக்க பல நாடகங்கள் நடாத்தினர். இன்னும் அந்த நாடகம் தொடர்கிறது.  
கல்குடாத் தொகுதியில் குடிநீரை அறிமுகம் செய்து வைக்கப் போகின்றோம் என்று பேசிய போது. அதனை ஏளனமாக பேசியவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக குடிநீர் வசதியை ஏற்படுத்தி உள்ளோம்.  
அத்தோடு காத்தான்குடியில் தனியான பாரிய கழிவு நீர்த் தொகுதி ஒன்றை ஏறத்தாள பதினையாயிரம் மில்லியனுக்கு மேலான செலவில் அமைப்பதற்கு அமைச்சரவையில் அங்கிகாரம் கிடைத்து, அதற்கான ஒப்பந்தமும் ஓரிரு மாதங்களில் கைச்சாத்திடப்படவுள்ளது.  
மட்டக்களப்பு மவட்டத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை முன்கொண்டு செல்வதில் கட்சிக்கு வெளியில் இருந்து வந்த பிரமுகர்களின் பங்களிப்பை மறந்து விடக் கூடாது. 


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network