முறி மோசடி: அடுத்த சாட்சி பர்பேசுவல் ட்ரசரீஸ் கம்பனி நிறைவேற்று அதிகாரி


பர்பேசுவல் ட்ரசரீஸ் கம்பனியின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன நாளை (08) மத்திய வங்கி முறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.
கசுன் பலிசேனவிடம் சாட்சி விசாரணைகள் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், மத்திய வங்கியில் பணித் தடை செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் சமன் குமார ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.