இலத்திரனியல் 'சிப்' கொண்ட கடவுச்சீட்டு


அனைத்து வகை தகவல்களையும் உள்ளடக்கிய ‘சிம்’ அட்டை வடிவிலான இலத்திரனியல் 'சிப்' உடனான கடவுச்சீட்டொன்றை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை பிரஜைகளுக்கென இலத்திரனியல் கடவுச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து வகை தகவல்களையும் உள்ளடக்கிய ‘சிப்’ கொண்ட கடவுச்சீட்டொன்று வெளியிடப்பட உள்ளது.
இலத்திரனியல் வெளிநாட்டு பயண கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தல் மற்றும் வெளியிடல் வேலைத்திட்டத்தை முறையான ஆய்வின் பின்னர் அரச – தனியார்துறையின் பங்களிப்பின் கீழ் செயற்படுத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்நாட்டலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார விவகார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, மற்றும் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அமைச்சர் ஹரின் ​பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து அமைச்சரவைக்கு யோசனைகளை முன்வைத்துள்ளனர். இதற்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.