மகள்களை துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய தந்தை மறியலில்


மட்டக்களப்பு - மஞ்சந்தொடுவாய் பகுதியில், 6 மற்றும் 8 வயதான தனது பெண் பிள்ளைகளை  பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரான  50 வயதான தந்தையை, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  மட்டக்களப்பு மாவட்ட  நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
சிறுமிகளின் தாயும் தந்தையும் ஏற்கெனவே பிரிந்து வாழ்வதானவும்  தந்தைமறுமணம் செய்துள்ள நிலையில் சிறுமிகள் தாயுடன் வசித்து வருவதாகவும் விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
 தந்தை தங்களை அழைத்துச் செல்லும் சந்தர்ப்பங்களில் பாலியல் வன்புனர்வுக்குட்படுத்துவதாக குறித்த சிறுமிகள் தாயிடம் தெரிவித்த நிலையில், அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார். சிறுமிகள் இருவரும்  தங்களுக்கு நடந்த சம்பத்தை பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, தந்தையும்  சிறுமிகளையும் மருத்துவ  பரிசோதனைக்கு உட்படுத்தி, எதிர்வரும் 8ம் திகதி மன்றில் அது தொடர்பானஅறிக்கையை சமர்பிக்குமாறும், சந்தேக நபரான தந்தையை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.