தண்டப்பணத்தை அதிகரித்தமை அநீதியானது- மஹிந்த

மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் செய்து தண்டப் பணத்தை அதிகரித்தமையினால் முச்சக்கரவண்டி சாரதிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, அறிமுகம் செய்துள்ள புதிய மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் படி தண்டப்பணம் 25000 ரூபா வரை அதிகரித்துள்ளமை அநீதியானது எனத் தெரிவித்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இச்சட்டத்துக்கு எதிராக பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஷிரந்த அமரசிங்க  அறிவித்துள்ளார்.