;வீதி விபத்து தொடர்பான விழிப்பூட்டல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

;வீதி விபத்து தொடர்பான விழிப்பூட்டல்

Share This


 இறக்காமம் பிரதேசத்திற்குட்பட்ட மாணிக்கமடுவில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பொலிஸ் நடமாடும் பிரிவினரும், தமணை போக்குவரத்து பொலிஸாரும்,வீ.சி.மிலான் விளையாட்டுக் கழகமும் இணைந்து வீதி விபத்து தொடர்பாக பொதுமக்களையும் சாரதிகளையும் விழிப்புணர்வடையச் செய்யும் நிகழ்;வொன்றை வரிப்பத்தான்சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக 2017.08.06ம் திகதி இரவு 7.30 மணியளவில் சர்வமத தலைவர்களின் நல்லாசியுடன் சிறப்பாக நடாத்தினர். இங்கு வரிப்பத்தான்சேனை ஹிங்குறாணை பிரதான வீதியால் பயணித்த அனைத்து ரக வாகனங்களும் போக்குவரத்து பொலிஸாரால் நிறுத்தப்பட்டு அவ்வாகன சாரதிகளுக்கு வாகன விபத்து தொடர்பாகவும்,வாகனத்தை கவனமாகவும், மெதுவாகவும் செலுத்துவது பற்றியும் விழிப்புணர்வூட்டப்பட்டது. விபத்துக்கள் ஏற்படக் காரணமான விடயங்களை கணனியின் உதவியுடன் திரையில் படமாக காட்சிப்படுத்தி சாரதிகள், பயணிகள், பொதுமக்கள் என எல்லோரும் விழிப்புணர்வூட்டப்பட்டனர்.  இந்நிகழ்வில் தமணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.நிமல் சந்திரசிறி ,மாணிக்கமடு நடமாடும் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் திரு.ஆரியசேன, இறக்காமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனாப்.ஜௌபர், வரிப்பத்தான்சேனை ஜூம்ஆபள்ளிவாசல் தலைவர் எஸ்.உதுமாலெவ்வை,மற்றும் ஊர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

  ஆர்.எம்.பாயிஸ்
வரிப்பத்தான்சேனை – செய்தியாளர்

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE