பொலிஸாருக்கு வழங்கப்படும் புதிய மோட்டார் ​சைக்கிள்களில் கமெராக்களைப் பொருத்த நடவடிக்கை


பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் வீதிவிதிமுறைகளை மீறும் சாரதிகள் மற்றும் ​வேறு தவறுகளைப் புரிவோரை, இலகுவாக இனங்கண்டு தண்டனை வழங்கும் வகையில், பொலிஸாருக்கு வழங்கப்படும் புதிய மோட்டார் ​சைக்கிள்களில், கமெராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாடு பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, ​போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரி​சோதகர் ஈ.எம் பியரத்ன தெரிவித்துள்ளார்.