ரவியின் இராஜினாமா சிறந்த எடுத்துக்காட்டு – பிரதமர்

வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியிருப்பது ஒரு எடுத்துக்காட்டாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இராஜினாமாவை தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஆற்றிய பிரதமர் உரையின் போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் எவரும் இவ்வாறு இராஜினாமா செய்யவில்லை என்றும், தனக்கு எதிராக சோதனை முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை இலகுபடுத்துவதற்காக அமைச்சர் ரவி இராஜினாமா செய்திருப்பது நல்லாட்சியை தெளிவுபடுத்தியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.