கைவிடப்பட்ட நிலையில் கட்டு துப்பாக்கி மீட்பு


மஸ்கெலியா டஸ்ப்பி தோட்டத்திலிருந்து கைவிடப்பட்ட நிலையில் சட்டவிரோத கட்டு துப்பாக்கியொன்று மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சட்டவிரேத துப்பாக்கி மஸ்கெலியா டஸ்ப்பி குமரி தோட்டத்தின் தேயிலை மலையிலிருந்து 28.08.2017 அன்று  மதியம் 12.15 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வேலை செய்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மூங்கில் மரத்தடியில் கட்டு துப்பாக்கியொன்று இருப்பதை கண்டு மஸ்கெலியா பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து இத்துப்பாகி மீட்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத துப்பாக்கி தொடர்பாக, இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பாக அட்டன் மோப்ப நாய் பிரிவினை பயன்படுத்தி பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டு வருவதோடு விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.