ஹம்பாந்தோட்டை வட மேல் மாகாண சபையில் பதற்றம் : துறைமுக விவகாரம்


ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில் வட மேல் மாகாண சபையில் பதற்ற நிலைமை தோன்றியுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனவுக்கு குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில் வட மேல் மாகாண சபையில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் கைகளில் கறுப்புப் பட்டி அணிந்து பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த ஐ.தே. கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்ட போதே இந்த பதற்ற நிலைமை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.