வவுனியாவில் மீட்கப்பட்ட ஒரு தொகை கைக்குண்டுகள் அழிப்பு


வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை கைக்குண்டுகள் விசேட அதிரடிப்படையினரால் இன்று (24) அழிக்கப்பட்டன.

இந்த கைக்குண்டுகள், நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக வெடிக்கவைத்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றுமுறிப்பு பகுதியில் பாழடைந்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்த 8 கைக்குண்டுகள் அண்மையில் மீட்கப்பட்டிருந்தன.

இவற்றில் 6 கைக்குண்டுகள் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.